Breaking News
Home / ஆன்மீகம் / சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார்

சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார்

திருச்சிற்றம்பலம் குறித்த சர்ச்சையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார் எவ்வளவு தடை வந்தாலும் மதங்களை மறந்து மனிதம் வளர்க்கும் சேவை தொடரும் என பேட்டி அளித்துள்ளார்..!!

சென்னை புழல் அருகே உள்ள புத்தகர த்தில் யோகக்குடில் என்ற அமைப்பை ஏற்படுத்தி மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து சாதி மத இன வேறுபாடுகள் இன்றி கடவுளை கடவுள் யார் என்ற உண்மையை போதிக்கும் வகுப்பினை சிவயோகி என்பவர் நடத்தி வருகிறார்.                               

இறைவன் என்றால் யார் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன திருவாசகம் என்றால் என்ன மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற அடிப்படையில் போதித்து வகுப்பினை எடுத்து வருகின்றார் சிவயோகி என்ற எம்எஸ்சி சைக்காலஜி பயின்ற பட்டதாரி புத்தகரம் அன்னை இந்திரா நகரில் எண்8 என்ற முகவரியில் யோகக்குடில் என்ற பெயர் தாங்கி இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இவரது கருத்துகளை இணையதளம் சமூக வலைதளங்கள் பேஸ்புக் வாட்ஸ் அப் யூடியுப் போன்ற வலைதளங்களில் காணக்கிடைக்கின்றன சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிப்பட காட்சிகளை பதிவிட்டுள்ளார் இதில் இவர் போதித்து வரும் முறையினை சகித்துக் கொள்ளாத சிலர் இவரது வீடியோக்களில் ஆபாசம் இருப்பதாகவும் சிவனை திருச்சிற்றம்பலம் பற்றி கொச்சைப்படுத்தி இவர் பதிவுகளை பதிவிடுவதாக கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறாக இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளதாக புகார் தெரிவித்ததுடன் நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என சிவனடியார்கள் புழல் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவர் மீது புழல் காவல் நிலையம் மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சிவனடியார்கள் என்ற பெயரில் புகார் அளித்துள்ளனர் இதனிடையே சமீபத்தில் புழல் காவல்துறையினரால் கடந்த பிப்ரவரி ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக ஒரு நாள் சிறைவாசத்தை புழல் சிறையில் அனுபவித்து தற்போது பிணையில் வெளிவந்து மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற அவரது பணியை யோக குடிலில் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் தனது வீடியோவை எடிட் செய்து வேண்டுமென்றே புகார் கூறி தனது வளர்ச்சி பிடிக்காத சிலர் தான் போதிக்கும் முறையை பிடிக்காத நபர்கள் வேண்டுமென்றே புகார் அளித்து சிறைக்கு அனுப்பியதாகவும் இதனால் தனக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் முறையாக இதனை நீதிமன்றத்தில் அணுகி நிச்சயம் தனது பணியைத் தொடருவேன் என்று சிவயோகி தெரிவித்துள்ளார்.  இதனிடையே எமது செய்தியாளரை சந்தித்த அவர் எந்த மதத்தையும் குறைகூறுவது தனது வேலை இல்லை என்றும் மனிதம் வளர்ப்போம் முறையாக இறைவனை அறிதல் குறித்த வகுப்பினை மட்டுமே தான் நடத்தி வருவதாகவும் தனக்கே உரிய பாணியில் உள்ளூர் மக்கள் பேசும் வழக்காடு மொழியிலேயே இதை தெரிவிப்பது தனது பாணி என்றும் சிவயோகி கூறியுள்ளார்.

இப்பணியை தான் நிறுத்த போவதில்லை என்றும் தொடர்ந்து மனிதன் போல இருக்கும் இந்த அரசியலை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் இவரது போதனைகளை பிடித்துப்போய் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மத பாகுபாடு இன்றி இவரிடம் இவரின் பிரசங்கத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு அன்றாடம் வந்து உபதேசத்தைக் கேட்டு செல்கின்றனர். இலவச வகுப்பையும் இவர் நடத்தி வருகின்றார். பணம் கொடுத்தும் இவரிடம் உபதேசத்தை ஏராளமானோர் கேட்டு செல்கின்றனர். பணம் கொடுக்க முடியாதவர்கள் 50 நாள் மரம் செடி கொடிகளை பராமரிக்கும் பணியையும் செய்கின்றனர்.

இவரது ஆசிரமம் திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது தொடர்ந்து இவரின் வளர்ச்சியைப் பொறுக்காமல் புகார்கள் தெரிவிக்கும் இவர் உண்மையில் எனது வார்த்தை யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் கேட்கப் பொறுக்காத அவர்கள் இதனை பார்க்க வேண்டாம் என்றும் தனது கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாமென தனது வீடியோ பதிவிலேயே குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் தாண்டி இவரது யூட்யூபில் பணம் செலுத்தி இவரது உபதேசத்தை பல ஆயிரக்கணக்கானோர் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது உண்மை நிலையை அறியாமல் தன்னிடம் முறையாக விசாரிக்காமல் பொய் புகார் மீது தங்கை காவல்துறை கைது செய்தாலும் இதன் மூலம் தனக்கு ஒரு பாடத்தை கற்க வாய்ப்பு கிடைத்ததாகவும் வெள்ளந்தியாக தனக்கே உரிய பாணியில் தெரிவிக்கிறார் சிவயோகி.

மதங்களை கடந்து மனிதர்களை நேசியுங்கள் என்று கூறுவதில் தவறில்லை ஏற்புடையதே. ஆனால் அதை சென்னைவாசிகள் கூறாமல் தமிழை நேசிக்கும் நபராக திகழும் சிவயோகி நுனி நாக்கு ஆங்கிலத்தில் பிற சமய சொற்பொழிவாளர்கள் போன்று பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் பெரும்பாலும் சென்னை பாஷையில் தனது பிரசங்கத்தை செய்வதையே பெருமையாகவும் கருதுகிறார் என்றால் அது மிகை அல்ல.

ஒன்று மட்டும் இங்கே உண்மை புலப்படுகிறது எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்கே.

Source : Rathiri Rounds News

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster