Breaking News
Home / அரசியல் / பாமகவுக்கு எதிராக அதிமுகவின் ராஜதந்திரம்! என்ன தெரியுமா?

பாமகவுக்கு எதிராக அதிமுகவின் ராஜதந்திரம்! என்ன தெரியுமா?

பாமகவுக்கு எதிராக அதிமுகவின் ராஜதந்திரம்! என்ன தெரியுமா?

தேர்தலுக்காக பாமக உடன் கூட்டணி வைக்கும் அதிமுக இடஒதுக்கீடு வழங்கிவிட்டு பின்னர் அதில் கை வைக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சமுதாய ஓட்டுகள் வைத்திருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் பாமக திராவிட கட்சிகளுடன் ஒட்டுக் கொள்வது வழக்கம். திராவிட கட்சிகளுடன் கூட்டணி இனி எப்போதும் கிடையாது என்ற சொன்ன பிறகும் கூட அதிமுக உடன் கூட்டணி வைத்த பெருமை பாமகவை சாரும்.

அந்த வகையில் இந்த முறை அதிமுக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை ஜவ்வாக இழுக்கிறது. காரணம் ராம்தாஸ் கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு. 10.5% உள் ஒதுக்கீடு கேட்கிறார் அவர்.

அதனால் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏனென்றால் பாமக கோரிக்கையை நிறைவேற்றிவிட்டால் எல்லா சமூகத்தினரும் கோரிக்கையுடன் வந்து நிற்பார்கள்.

இந்நிலையில் 10.5% உள் ஒதுக்கீடுக்கு அதிமுக ஒப்புக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 25 சீட் தான் தருவோம் என்று அதிமுக கூறியுள்ளது.

உள் ஒதுக்கீடு தந்துவிட்டால் எல்லோருக்கும் தர வேண்டி இருக்குமே என்று யோசித்த அதிமுக, முதலில் கொடுத்துவிட்டு பிறகு நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு வாங்கி விடலாம் என்ற திட்டத்தில் அதிமுக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஆக மொத்தம் தேர்தலின் போது கூட்டணி என்பது நேர்மையற்ற சந்தர்ப்பவாத கூட்டணிதான்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster