Breaking News
Home / அரசியல் / திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..!!

தூத்துக்குடி,   தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களையும் பெற உள்ளார்.
இந்நிலையில் கோவில்பட்டியில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கு அளிக்கப்படும் ஒப்பகைசீட்டை பத்திரமாக வைத்து இருக்க வேண்டும். திமுக  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் மனுக்கள் மீது தீர்வு காணப்படும். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றார்.

Thanks to Daily Thanthi

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster