வேலூர் மாவட்டத்தில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்..!!
வேலூர்:- வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் 14 தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
அணைக்கட்டு தாலுகா தேர்தல்பிரிவு தாசில்தார் விஜயகுமார் தற்காலிக பதவி உயர்வுபெற்று தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு நடுவர் தீர்ப்பாய தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சரவணன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய பூமா சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக (தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு) தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய பாலாஜி கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெகதீஸ்வரன் வேலூர் கோட்ட கலால் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய குமார் பேரணாம்பட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய பழனி அணைக்கட்டு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சரவணமுத்து சென்னை-பெங்களூரு விரைவுப்பாதை திட்ட நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய லலிதா கலெக்டர் அலுவலக அகதிகள் பிரிவு தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி தாசில்தார் விநாயகமூர்த்தி கே.வி.குப்பம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ஹெலன்ராணி வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலக (நிலஎடுப்பு) தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கலைவாணி வேலூர் கலால் மேற்பார்வையாளராகவும், அங்கு பணியாற்றிய உஷாராணி வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தேசிய நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பணியை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ளார்.
Thanks to Daily Thanthi
Rathiri Rounds Never Stop