Breaking News
Home / கொரோனா / பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா.. பள்ளி மூடல்..

பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா.. பள்ளி மூடல்..

பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா.. பள்ளி மூடல்..!!

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான 10-ம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் சக மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster