Breaking News
Home / இந்தியா / மத்திய அரசு – விவசாய பிரதிநிதிகள் இடையே இன்று 10- ஆம் கட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு – விவசாய பிரதிநிதிகள் இடையே இன்று 10- ஆம் கட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு – விவசாய பிரதிநிதிகள் இடையே இன்று 10- ஆம் கட்ட பேச்சுவார்த்தை..!

மத்திய அரசு - விவசாய பிரதிநிதிகள் இடையே இன்று 10- ஆம் கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் ஏறத்தாழ 2 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.
அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பிரச்சனைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளபோதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாய சங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழு நாளை முதல் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழு தெரிவித்துள்ளது.
Thanks to Daily Thanthi

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster