Breaking News
Home / கல்வி / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி திறப்பின் போது தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்

இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி திறப்பின் போது தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிய அறிவுரைகள்

19 01 2021 இன்று பள்ளி திறப்பின் போது அரசு அரசு/ உதவி பெறும்/ மெட்ரிக்/ சிபிஎஸ்இ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரைகள் :-

1) பள்ளி நுழைவு வாயிலில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நுழையும்போதே அவர்கள் அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்து வகுப்பு வாரியாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

2) அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும்.

3) அனைத்து நிலைகளிலும் அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

4)கடந்தாண்டு ஒன்பதாம் வகுப்பில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு இவ்வாண்டும் இன்று முதல் சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5) ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்.

6) ஒரு மாணவர் முதல் நாள் அமர்ந்த இடத்திலேயே, மற்ற அனைத்து நாட்களிலும் அமர்வதற்கு ஏதுவாக மாணவர்களின் பெயர்களை அவரவர் இருக்கையில் பிரிண்ட் எடுத்து ஒட்டப்பட்டு இருக்கவேண்டும்.

7) வகுப்பறையின் நுழைவாயிலில் எந்த வகுப்பு ,எந்த பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பட்டியல் விவரம் அமர்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஒட்டப்பட்டு இருக்கவேண்டும்.

8) ஆசிரியர்களுக்கு கால அட்டவணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். (ஒரு பாடத்திற்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில்)

9) ஒரு வகுப்பிற்கு ஒரு பொறுப்பாசிரியர், ஒரு பள்ளிக்கு ஒரு பொறுப்பாசிரியர் வீதம் குழு அமைத்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். பிற ஆசிரியர்களுக்கும் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

10) இருக்கைகள், வகுப்பறைகள், வராண்டா, அறிவியல் ஆய்வுக்கூடம், ஹைடெக் லேப் தூசு இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

11) குடிநீர் வசதி செய்திருக்க வேண்டும்

12) கழிப்பறை ,சிறுநீர் கழிப்பிடம் தூய்மையாக இருக்க வேண்டும்.

13)மாணவர்கள் எவ்வாறு பள்ளிக்கு எவ்விதமான வாகன வசதிகளில் வருகிறார்கள் என்பது சார்ந்து பதிவேடு பராமரிக்க வேண்டும்

14) மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்குவது குறித்து பதிவேட்டில் வகுப்பு வாரியாக கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

15) மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

16) அனைத்து ஆசிரியர்களும் ஆளறி சான்றிதழ் அணிந்திருக்க வேண்டும்.

17) பள்ளி வளாகம் முழுவதும் சமூக இடைவெளி நடைமுறைப்படுத்துவது சார்ந்து வட்டம் அல்லது சதுரம் வரைந்திருக்க வேண்டும்.

18) தினந்தோறும் வகுப்பறைகள் பள்ளி வளாகம் தூய்மையாக பராமரிக்க வேண்டும்

19) ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் கைப்பேசி எண் வைத்து இருக்க வேண்டும். பணியாளர்களின் உதவியுடன் தினந்தோறும் காலையில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

20) அருகாமையில் உள்ள மருத்துவர்கள் மருத்துவமனை பணியாளர்களின் கைபேசி எண் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளியில் மருத்துவ முகாம் எப்போது நடத்துவது சார்ந்த விபரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

21) அனைத்து வகுப்பறைகள், வகுப்பறைகளில் நுழைவு வாயில்கள், அனைத்து ஆய்வகங்கள், பள்ளி வளாகம் முழுவதும் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையினர்
வெளியிட்டுள்ள COVID-19 முன்னெச்சரிக்கை வாசகங்கள், பதாகைகள் பிரதி எடுத்து ஒட்டப்பட்டு இருக்கவேண்டும் வேண்டும்.

மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைஇயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளதால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் யாவையும் தவறாமல் பின்பற்றியிருக்க வேண்டும்.

Thanks to முதன்மைக் கல்வி அலுவலர், இராணிப்பேட்டை

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster