Breaking News
Home / கல்வி / திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு ..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு ..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு ..!

திருவள்ளூர் மாவட்டம் சதுரங்க பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் ஆய்வு நாளை 757 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 10மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் என
757 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கல்வித்துறை அதிகாரிகளுடன் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டு வெறும் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் மாணவர்களுக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து பள்ளிகளைத் இழக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு நிதிஉதவி 6 சிபிஎஸ்சி கேந்திரிய வித்யாலயா 4 அரசு உதவி பெறும் சிபிஎஸ்சி கேந்திரிய வித்யாலயா 115 சிபிஎஸ்சி பள்ளிகள், 333 தனியார் மெட்ரிக்பள்ளிகள், 113 மேல்நிலைப்பள்ளிகள், 149 உயர்நிலைபள்ளிகள்  என மொத்தம் மாவட்டத்தில் 757 பள்ளிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

நாளை திறக்கப்பட உள்ளதாக சதுரங்க பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா பள்ளிகளில் உடல் வெப்பம் அளவிடும் கருவி ஆக்சிம் மீட்டர் மற்றும் கிருமிநாசினி சானிடைசர் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்ட பின்னர் தெரிவித்தார்.

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster