அழகாபுரி அணையில் தண்ணீர் திறப்பு: கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.!
சமீபத்தில் அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் அழகாபுரி அணையின் நீர்மட்டம் படிப்படியாக 26 அடியாக உயர்ந்து வந்தது. கடந்த 16-ந்தேதி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 500 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். அந்த தண்ணீர் குடகனாறு வழியாகச் செல்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழகாபுரி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 28 அடி ஆகும். குடகனாறு திண்டுக்கல் மாவட்டம் தாண்டி கரூர் மாவட்டத்தில் பண்ணப்பட்டி, ஆத்துமேடு, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், நாகம்பள்ளி சென்று மூலப்பட்டி என்ற இடத்தில் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி ஆற்றில் கலக்கிறது.
Rathiri Rounds Never Stop