திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.!
கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அரசு பஸ் டிரைவர். இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி, தனியார் கல்லூரி பஸ் டிரைவராக உள்ளார்.
நண்பர்களான இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலை காரணமாக புதுப்பேட்டை கிராமத்துக்கு சென்று விட்டு திருப்பத்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக புதுச்சேரி பகுதியில் இருந்து பெங்களூரூவை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருப்பதிக்கு கால் முறிந்தது.
பின்னால் அமர்ந்திருந்த ரமேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். திருப்பதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to daily hunt
Rathiri Rounds Never Stop