Breaking News
Home / அரசியல் / ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் , அதிர்ச்சியில் அதிமுக அமைச்சர்கள்

ஆளுநர் மாளிகையில் மு.க. ஸ்டாலின் , அதிர்ச்சியில் அதிமுக அமைச்சர்கள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். அப்போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதிமய்யம் என முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,’அ.தி. மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

இதனிடையே, நாளை முதல் தொடர்ந்து 10 நாட்கள் 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். அப்போது, அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் எந்த எந்த அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் கொடுக்க உள்ளார் என்பது எல்லாம் சஸ்பென்ஸாக உள்ளது. இதனால், அமைச்சர்கள் பலர் பதற்றத்தில் உள்ளனர்.

Thanks to daily hunt

 

 

 

 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster