Breaking News
Home / ஆன்மீகம் / சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி? தலைமை செயலாளர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி? தலைமை செயலாளர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி? தலைமை செயலாளர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள சுகாதார துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வந்த அவரிடம் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘மண்டல காலம் முடியும் வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தேவை இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் முடியும் வரை (டிசம்பர் – 26) தற்போதுள்ள நிலை தொடரும். மகர விளக்கை முன்னிட்டு டிசம்பர் 30-ந் தேதி முதல் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று பதில் அளித்தார்.

Thanks to daily hunt

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster