Breaking News
Home / கொரோனா / தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு !!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சமாக உயர்வு !!

தமிழகத்தில் இன்று மேலும் 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,029 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,203 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 081 ஆக உயர்வடைந்து உள்ளது. சென்னையில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,211 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,909 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமக தற்போது 10,039 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Thanks to : dinathandhi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster