விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் ( வயது 28). கார் டிரைவராக வேலை செய்யும் இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் பூவிருந்தவல்லி ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளார். இவரை நேற்று இரவு சதீஷ் என்பவர் அவரது வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் அசோக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது அவரது இடுப்பு விலா எலும்பில் கத்தி குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அசோக்குமாரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளவேடு காவல்துறையினர் விஜயகுமாரி வீட்டிலிருந்து அழைத்து சென்ற சதீஷின் தந்தை ராஜா சகோதரன் முத்து ஆகிய 2 பேரையும் வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது முன் பகை காரணமா? என பல்வேறு கோணங்களில் வெள்ளவேடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் அசோக் குமாரை அழைத்து வந்த சதீஷ் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யகோரியும் கொலையான நபருடைய உடல் தரப்படாததால் உறவினர்கள் திடீரென திருவள்ளூர் – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop