சீரியல் நடிகை சித்ராவின் ஃபேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது கடைசி பதிவு வைரலாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் விஜே சித்ரா. தொகுப்பாளினியாக ஊடகத்துறையில் நுழைந்த அவர் படிப்படியாக முன்னேறி நடிகையானார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல் இவரும் தனது ரசிகர்களின் பிறந்தநாளன்று அவர்களது வீட்டுக்கு நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் உருவாக்கிய வீடியோக்கள் மற்றும் தனது புதிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவரை 1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலான புகைப்படங்களில் புன்னகையுடன் காட்சியளிக்கும் சித்ரா இன்று அதிகாலை தனியார் ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பார்கள்.
சித்ரா வெளியிட்டிருக்கும் கடைசி இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கூட அவரது அழகு புன்னகையை உதிர்த்திருப்பார். அதேபோல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட செல்ஃபி வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவில் மேடம் லவ் பண்ணதும் பண்ணாங்க எனக்கூறி சித்ராவை சரண்யா கிண்டலடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுமார் 13 மணி நேரத்துக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தான் இன்ஸ்பிரேஷன் என ஒரு மீம்ஸ் பதிவை “Congrats Nattu” என தலைப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
சித்ராவின் மர்மமான மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது பேஸ்புக் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் இன்னும் ஆக்டிவ்வாக இருக்கிறது.
28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் உயிரிழப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஹேமந்த் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் திருவான்மியூரில் உள்ள சித்ராவின் தாயாருக்கும் ஹேமந்துக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதால் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் சித்ராவும் ஹேமந்தும் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ராவின் தாடையில் இருக்கும் காயம் தூக்கு மாட்டிக்கொண்ட போது புடவையால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், முகத்தில் நகக்கீறல் எப்படி வந்தது என ஹேமந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop