இருளில் மூழ்கிய புதுச்சேரி ! பொது மக்கள் அவதி !!

புதுச்சேரியில் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் திடீரென தடைபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புரெவி புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள. மறுமின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை.
அந்த வகையில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட இந்திராநகர், புது நகர், மாரியம்மன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளால் சூழப்பட்டது.
இதனால், ஆவேசம் அடந்த அப்பகுதி மக்கள் புதுச்சேரி – விழுப்புரம் செல்லும் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று முதலியார்பேட்டை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் புதுச்சேரி – கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Thanks to Daily Hunt
Rathiri Rounds Never Stop