Breaking News
Home / செய்திகள் / நிவர் புயல் நிவாரண முகாம்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நிவர் புயல் நிவாரண முகாம்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நிவர் புயல் நிவாரண முகாம்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

          இராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் எச்சரித்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் வருவாய் துறையினரை முடிக்கிவிட்டு அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் ஆற்காடு வாலாசா கலவை ஆகிய தாலுக்காக்களுக்கு உட்பட்ட நிவாரண முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை வட்டாட்சியாளர்களிடம் கேட்டு அறிந்தார்.

குறிப்பாக ஆற்காடு அடுத்த புன்னப்பாடி முப்பதுவெட்டி கிராமத்தில் பாலாற்றங்ரை அருகில் தாழ்வான பகுதியில் கூரை வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்த மக்களை புன்னப்பாடி கிராம அரசுபள்ளியில் தற்காலிக முகாம்களில் மக்களை பாதுகாப்புடன் தங்க வைத்துள்ள ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு தேவையானதை உடனடியாக செய்துகொடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி> மாங்காடு> திமிரி அடுத்த புங்கனூர்> கலவை அடுத்த மாம்பாக்கம் இரத்தினகிரி அடுத்த மேலகுப்பம் போன்ற நிவாரண முகாம்களில் மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Source : Rathiri Rounds

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster