Actor Thavasi Passed Away | எலும்பும் தோலுமாக சமீபத்தில் வெளியான தவசியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திரைப்பட நடிகர் தவசி புற்றுநோய் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம். கிழக்குச் சீமையிலே படத்திலிருந்து ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ 140-க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர மற்றும் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார் தவசி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எலும்பும் தோலுமாக சமீபத்தில் வெளியான தவசியின் புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேலும் தமிழ் சினிமா நடிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி உதவி செய்தனர். அதேபோல, சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் பண உதவி செய்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop