Breaking News
Home / இந்தியா / வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020 !!

வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறிய 2020 !!

2020-ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது

புதுடெல்லி,
பிரதமர் அலுவலகத்தின் (பி.எம்.ஓ) வலைத்தளத்தின் தரவுகளின்படி, 2014-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு 8 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016 ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். 2015 இல் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது.
2020 -ஆம் ஆண்டு நவம்பர் 22 வரை பிரதமர் மோடி ஒரு சர்வதேச பயணத்தை கூட மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to : dinathandhi

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster