Breaking News
Home / அரசியல் / கூட்டத்தில் முக்கிய ஆலோசனை !!

கூட்டத்தில் முக்கிய ஆலோசனை !!

இன்று காலை நடைபெற்ற திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து இங்கே காணலாம்.

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. அதில், டி.ஆர்.பாலு. கே.என்.நேரு, பொன்முடி, ஆர்.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் உதயநிதி தொடங்கிய பிரச்சாரத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் தடைகளைத் தாண்டி

தேர்தல் பிரச்சாரம் தொடரும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Thanks to : samaiyam

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster