Breaking News
Home / சினிமா / விஜய்யின் அதிரடி உத்தரவு !!

விஜய்யின் அதிரடி உத்தரவு !!

நடிகர் விஜய்யின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உறுதிமொழி கூட்டம் நடத்தினர்.

விஜய் ரசிகர் மன்றமாக இருந்து பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதை தற்போது விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதையறிந்த நடிகர் விஜய், “என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடா்பும் இல்லை. எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்” என்று அதிரடியாக அறிக்கை விட்டு பரபரப்பை பற்ற வைத்தார்.

 

இதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, விஜய் சூழ்ச்சி ஒன்றில் சிக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்தோடு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளையும் விமர்சித்திருந்தார். இதற்கிடையில் மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பு தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இது தனது மக்கள் இயக்கத்தை பிளவுபடுத்தும் செயல் என எண்ணிய நடிகர் விஜய், தனது நிலைப்பாடு குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் மாவட்ட நிர்வாகிகள் மூலம் உடனடியாக விளக்குமாறு ரகசிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள நடராஜா திரையரங்கில் மதுரை வடக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ரகசிய கூட்டம் நடத்தினர்.

 

 

 

அதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் மாவட்ட தலைவர் கல்லணை தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தில் மட்டுமே அனைவரும் தொடர வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலிலும், முயற்சியிலும் பங்கேற்கக் கூடாது என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் இந்தக் கருத்தை அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய இயக்கத்தினரிடம் கொண்டு சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. விஜய் ரசிகர்களின் இந்த உறுதிமொழி கூட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster