Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் வெட்டிக்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு மோசஸ் தனது வீட்டு அருகே வந்து கொண்டிருந்து போது அவரை சில ரவுடிகள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மோசஸின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்த தன் மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக சமூக விரோதக் கும்பலின் கொலைவெறி தாக்குதலுக்கு தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மோசஸ் பலியாகியுள்ளதற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Thanks to : Daily Hunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster