அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை பின்னுக்கு தள்ளி டிரம்ப் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
வாஷிங்டன்,
உலகமே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில், அமெரிக்க வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும்.
இந்திய நேரப்படி காலை 9.35 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 222 வாக்குகளும், டிரம்ப் 292 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளனர். பல மாகாணங்களில் முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது.
Thanks to : dinathandhi
Rathiri Rounds Never Stop