வயநாட்டில் நக்சலைட் சுட்டுக்கொலை: தமிழக எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
கேரள மாநிலம் வயநாட்டில், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில், நக்சலைட் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார். அந்த பகுதியில் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. நீலகிரியில், கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பஞஞ்சாரத்துற அருகே வெள்ளாரங்குன்னு வனப்பகுதியில் உள்ள பந்திப்புயல் பகுதியில், தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் இன்று(நவ.,3) காலை 6 மணியளவில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நக்சலைட்களின் நடமாட்டத்தை கண்டறிந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிசண்டை நடந்தது. இதில் 32 வயது மதிக்கத்தக்க நக்சலைட் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நக்சல்களை அடையாளம் காண தமிழக நக்சல் சிறப்பு பிரிவு, கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நீலகிரியில் எல்லைகளுக்கு சீல் கேரளாவில் நடந்து வரும் மோதலை தொடர்ந்து, நீலகிரியில், கேரள எல்லையில் உள்ள 11 சோதனை சாவடிகளுக்கு, மாவட்ட எஸ்.பி., சசிமோகன் உத்தரவின்பேரில், சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள பகுதியில் இருந்து நக்சலைட்கள், நீலகிரி வனப்பகுதிக்குள் நுழைவதை தடுக்கவும், நீலகிரி வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Thanks to : Daily hunt
Rathiri Rounds Never Stop