கோவில் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என 5 கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தை எக்காரணத்தைக் கொண்டு விட்டுக் கொடுக்க மாட்டோம், கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் என கூறி, 5 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 11.16 ஏக்கர் நிலம் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை மாத திருவிழா, இரண்டு வாரம் நடைபெறும். பிரம்மாண்ட திருவிழாவில், ஆண்டிபாளையம் சின்னண்டிபாளையம், சின்ன கவுண்டன் புதூர், குள்ளே கவுண்டன் புதூர், குளத்தூர் புதூர் ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொண்டாடும் பெரும் விழாவாக நடக்கிறது.
இச்சூழலில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் 11.16 ஏக்கரில் 9 ஏக்கர் நிலத்தை போலீஸ் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் பயன்பாட்டுக்கு நிலம் வேண்டும், கோவில் நிலத்தை போலீசாருக்கு வழங்கக்கூடாது, என 5 ஊர் பொது மக்கள் , 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் பிரிவில் ரோட்டின் ஒரு பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம் எக்காரணத்தை கொண்டும் கோவில் நிலத்தை விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கிறது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார், கோவை காமாட்சிபுரி ஆதினம் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
Thanks to : Daily Hunt
Rathiri Rounds Never Stop