கொரோனா தொற்றால் காலமான அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப் படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்த துரைக்கண்ணு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
நுரையீரல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான நிலையில் அவரது உடல் மிகவும் நலிவடைந்தது. அதிகபட்ச பாதுகாப்பு கருவிகள் மூலமே சுவாசித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நேற்று இரவு காலமானார்.
அமைச்சரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரி மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் அருகே வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
“அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு தமிழ்நாட்டுக்கும், அதிமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது” என்று முதல்வர் கூறினார்.
அமைச்சரின் உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
Thanks to : samaiyam
Rathiri Rounds Never Stop