Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம் / வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றத்தில் மக்கள் !

வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றத்தில் மக்கள் !

வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றத்தில் மக்கள் !

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் அபிஷேக் என்கிற பாபு(20). இவர் சென்னை பல்லாவரம் வேல்ஸ் காலேஜில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவர் அபிஷேக் நேற்று சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்காஸ் கிராமத்தில் விண்ணேற்பு மாதா ஆலய கலையரங்கத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது பைக்கி இரவில் வீடு திரும்பினார். வழியில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.

அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த அபிஷேக் தப்பியோ முயன்றார். எனினும் மாணவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து மாணவர் அபிஷேக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த சோமங்கலம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அங்கு பாதுகப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thanks to : Daily Hunt

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster