பிரசவ வலிக்கு பயந்து கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை!
சென்னை வண்ணாரபேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவண்ணாரபேட்டையை சேர்ந்த நாகராஜ் (26) சுஷ்மிதா (23) என்ற பெண்ணை மூன்று வருடமாக காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சில நாள்களாக சுஷ்மிதா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதை பற்றி அவர் வீட்டில் சொல்லும் போது பிரசவ கால வரைக்கும் வலி இருக்கும் என்று பெரியவர்கள் சுஷ்மிதாவை சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் பிரசவ வலிக்கு பயந்த சுஷ்மிதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று உடம்பு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to : Daily Thanthi
Rathiri Rounds Never Stop