Breaking News
Home / செய்திகள் / ஆதார் அட்டையில் குற்றசாட்டு !!

ஆதார் அட்டையில் குற்றசாட்டு !!

ஆதார் அட்டையில் ’எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ்ச்சொல் இந்தியில் பதிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் இந்தியில் வாசகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதார் அட்டையின் கீழ்ப்பகுதியில் ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மாநில மொழிகளில்தான் இந்த வாசகம் இடம்பெறும்.

இந்த நிலையில், தமிழகத்தில் 50 ரூபாய் செலுத்தி ஆதார் விவரங்களை திருத்தம் செய்யும்போது, அதில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், ஆனால் ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற வார்த்தை மட்டும் இந்தியில் இடம்பெற்றுள்ளதென்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Thanks to : news 18

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster