கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமையில் சிகிச்சையிலிருக்கும் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்துவந்த கொரோனா பரவல் கடந்த இரண்டு தினங்களாக சற்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சாதரண மக்களைக் கடந்து பிரபலங்களும் உயிரிழந்துவருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 6-ம் தேதி அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு செயற்கை சுவாசம் முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அவர், ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop