பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரில் மகாராஜன், வீரய்யா, உள்ளிட்ட 7 பேர் மீது கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்ததாக 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைகுளம் கிராமத்தை சேந்தவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர் 100 ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.
இவருக்கும் மற்றொரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்குக்கும் ஆடு மேய்ப்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த எட்டாம் தேதி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்து சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
#அநாகரிகம்: வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம். pic.twitter.com/6BBvT2PkfF
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 12, 2020
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரில் மகாராஜன், வீரய்யா, உள்ளிட்ட 7 பேர் மீது கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop