Breaking News
Home / செய்திகள் / திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மனிஷா படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மனிஷா படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டியும் மத்திய அரசை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத உத்தரபிரதேச அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய
வழக்கறிஞர் இளவரசு மனிஷாவிற்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் அல்லது இந்தியாவை இரண்டாக பிரித்துக் கொடுத்துவிடுங்கள் எங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப் படுத்திக்கொள்கிறோம்.
எனவும் மேலும் படுகொலை செய்யப்பட்ட பெண் இந்து மதத்தைச் சார்ந்தவரே ஆனால் ஏந்த ஒரு இந்து அமைப்பும் மனிஷாவிற்கு நீதி கேட்டு போராட முன்வராதது கண்டிக்கத்தக்கது என கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை செயலாளர் தளபதி சுந்தர், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் இராசகுமார், தொகுதிச் செயலாளர் இளவரசு, தொண்டர் அணி மாநில துணைச்செயலாளர் அருண் கவுதம், அரசை மையம் மாநில துணைச்செயலாளர் கைவண்டுர் செந்தில், மாநில தேர்தல் குழு செயலாளர் ரமேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ் கே குமார், ஏகாம்பரம் பூந்தமல்லி தொகுதி செயலாளர் திருவூர் சங்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோதண்டன், மகளிரணி வடக்கு மாவட்ட செயலாளர் பத்மா, ஊராட்சிமன்ற தலைவர் கூட்டமைப்பு தலைவர் சுமிதா சுந்தர், பூண்டி ஒன்றிய துணை செயலாளர் ராஜா, கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் இளைஞரணி திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster