Breaking News
Home / சினிமா / தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது ..

தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது ..

தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. வருகிற 15-ந் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் தற்போது 9-வது கட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்த தளர்வுகளில் வருகிற 15-ந் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதில், 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். தியேட்டருக்கு உள்ளே நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், பொதுவான பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். நுழைவுவாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை கண்காணிக்கப்பட்டு, அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேணடும். ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் தியேட்டர் அரங்குகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏ.சி. 24 முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழக அரசு சார்பில் தியேட்டர்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்த பின்னரே தியேட்டர்கள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், தமிழகத்திலும் 15-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து மாவட்டங்களிலும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 6 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Thanks to : malaimalar

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster