பிக்பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்துள்ளது.
கடந்த 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கிய நிலையில் முதல் நாளிலே செய்தி வாசிப்பாளரான அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி இடையே மோதல் ஏற்பட்டது. அனிதா விளையாட்டாக சுரேஷ் குறித்து ஒரு செய்தியை தொகுத்து அழகாக வாசித்துக் காட்டினார்.
அப்போது சிலர் அவரை பாராட்டிய நிலையில், சுரேஷ் செய்தியாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என்பதால் தள்ளி இருக்க வேண்டும் என கூறினார். இதனால் கடுப்பான அனிதா எச்சில் தெறிக்கும் என்று நீங்கள் கூறியது என்னை காயப்படுத்தியது என சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு செய்தியாளர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை என சுரேஷ் மறுப்பு தெரிவித்தார். அதன் பின்னர் இருவரும் கை கொடுத்து சமாதானமான நிலையில் அந்த மோதல் இன்றும் முடிவடையாமல் தொடர்ந்துள்ளது.
இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், “நான் ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா சொல்லி விட்டேனாம். அவர் வேறு எதோ கூட சொன்னதாகவே இருக்கட்டும்.. எனக்கு மீனிங் அப்படித்தான் இருந்தது. அதைத்தான் நான் சொன்னேன். உடனே அவர் அதை பிடித்துக்கொண்டார்.
எஸ்கேப் ஆவதற்கு ‘நியூஸ் ரீடர்’ என்ற ஒன்று போதும். நான் நியூஸ் ரீடரை சொல்லவில்லை உடனே குறும்படம் போடுங்கள் என்கிறார். ஓகே நீங்கள் நியூஸ் ரீடரை சொல்லவில்லை, ஆனால் எச்சில் தெறிக்கிறது என சொன்னீர்கள் அல்லவா? மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள்.
நான் நியூஸ் ரீடர் என்ற எக்ஸ்ட்ரா வார்த்தையைப் போட்டு விட்டேன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். இது எனக்கு தேவை இல்லாத கெட்ட பெயர். அதை அவர் ஏற்படுத்தப் பார்க்கிறார். அவர் என்னை டிரிக்கர் செய்ய பார்க்கிறார். அவருக்கு புரமோ வர வேண்டும் என ஆசை, அவருக்கு நிறைய புரமோ வீடியோ போடுங்கள்” என பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு நின்று அனிதா சம்பத் பேசுகிறார். அவர் அருகில் உள்ள சோம் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் அனிதா சம்பத் ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop