Breaking News
Home / செய்திகள் / தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது !! – திருவள்ளூர் மாவட்டம் ..

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது !! – திருவள்ளூர் மாவட்டம் ..

ஆவடி:மகனை அடித்த தகராறில், தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.சென்னை, பட்டாபிராம், கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் இஸ்ரேல் பாபு, 42; தொழிலாளி.இவரது மகன் ஐசக், 10. இஸ்ரேல் பாபுவின் வீட்டருகே, அவரது தம்பி ஆண்ட்ரூஸ், 37, தன் குடும்பத்துடன் வசிக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் இருந்த ஆண்ட்ரூஸ், தன்னிடம் குறும்பு செய்த, அண்ணன் மகன் ஐசக்கை அடித்திருக்கிறார். இது குறித்து அறிந்த இஸ்ரேல் பாபு, மகனை அடித்த தம்பியை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாபு, கத்தியால் ஆண்ட்ரூசை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து விசாரித்த பட்டாபிராம் போலீசார், கொலை முயற்சி வழக்கில், நேற்று காலை, இஸ்ரேல் பாபுவை கைது செய்தனர்.

 

Thanks to : dinamalar

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster