தற்போதைய கிட்களின் படி கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள 24 மணி நேரம் ஆகும் நிலையில், 2 மணி நேரத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் ரிலையன்ஸ் புதிய கிட் ஒன்றை தயாரித்துள்ளது
உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய RT-PCR எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
இந்த மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கொரோனா சோதனை முடிவுகளை வெளியிட 24 மணி நேரம் செலவாகிறது. இந்த நிலையில், ரிலையன்ஸ் உயிர் அறிவியல் நிறுவனமானது 2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் புதிய RT-PCR கிட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
R-Green Kit என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிட் ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் தரச்சோதனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். விரைவில் ஐ.சி.எம்.ஆரின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் இந்த கிட் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop