Breaking News
Home / அரசியல் / பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால் ?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் கட்சியான சிவசேனாவுக்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து மும்பை திரும்பிய கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு Y+ பாதுகாப்பு வழங்கியது. இதனால் கங்கனாவுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக கூறி சிவசேனா அதிருப்தி தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத விஷயமாக நடிகர் விஷால் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை சமீபத்தில் செய்திருந்தார். அதில். கங்கனாவின் தற்போதைய செயல்கள் பகத்சிங் செய்ததை போல் உள்ளதாக புகழாரம் சூட்டினார். இதனையடுத்து நடிகர் விஷால், பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல் நடிகர் விஷால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு நடிகர் விஷால் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள விஷாலின் மேலாளர் ஹரி, எல்.முருகனை சந்திக்க நடிகர் விஷால் நேரம் கேட்கவில்லை என்றும், அவர் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளார்.

 

Thanks to : news 7

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster