`தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி கூடுகிறது. இதனையொட்டி நடைப்பெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் சுகாதாரத்துறையால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதே போல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் அவர்களது இல்லத்துக்கு நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் , சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேறவுள்ள செய்தியாளர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக சட்டப்பேரவை செயலகம் சார்பில் 5000 முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop