Breaking News
Home / கரூர் / பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் பஸ்கள் இயக்கம் – கரூர் மாவட்டம் ..

பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் பஸ்கள் இயக்கம் – கரூர் மாவட்டம் ..

அனைத்து மண்டலங்களிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,
தமிழகம் முழுவதும் நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டதையடுத்து, கரூர் பஸ் நிலையத்தில், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாவட்டங்களுக்கிடையே இயக்கப்பட்ட பஸ்கள், முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல நேற்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அனைத்துப் பஸ்களிலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.
டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பேஸ்ஷீல்டு எனப்படும் முகத்தை பாதுகாக்கும் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது பஸ்சில் முககவசம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு கண்டக்டர்கள் மூலம் ரூ.5-க்கு முக கவசம் வழங்கப்படுகிறது. பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறையின் அனைத்து மண்டலங்களிலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் அன்பழகன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துத்துறை மண்டல மேலாளர் குணசேகரன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Thanks to : dinathandhi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster