பப்ஜி இணைய விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பப்ஜின் உருவ படத்திற்கு மாலை அணிவித்த சுவரொட்டியை தோள்களில் சுமந்து இளைஞர்கள் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு இந்த மாதம் 2ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்தியாவில் சுமார் 3 கோடிக்கும் அதிகாமானோர் பப்ஜி மொபைல் கேம்மை பயன்படுத்தி வந்தனர்.
சிறுவர்கள், மாணவர்கள் என கோடிக்கணக்கானோர் இந்த கேமுக்கு அடிமையாகி இருந்தனர். மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து கூகிள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பப்ஜி மொபைல் ஆப் அகற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே டவுன்லோடு செய்திருப்பவர்களும் இனி விளைடாட இயலாத வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றின் பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக” மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 118 சீன ஆப்ஸ்களை மத்திய அரசாங்கம் தடைசெய்வதாக அறிவித்தது. நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரபலமான மல்டிபிளேயர் கேம்களில் ஒன்று திடீரென தடைசெய்யப்பட்டதால் விளையாட்டாளர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
பப்ஜிக்கு ஏற்பட்ட நிலையை மீம்ஸ் மூலம் பலரும் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பப்ஜின் உருவ படத்திற்கு மாலை அணிவித்த சுவரொட்டியை அதன் ரசிகர்களின் தோள்களில் சுமந்துகொண்டு, வெள்ளை நிற உடையணிந்த ஊர்வலம் மேற்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் இறுதி சடங்குகளின் போது ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்று கோஷமிட்டு நகைச்சுவையாக ஊர்வலம் மேற்கொண்டனர். பல பப்ஜி ரசிகர்கள் PUBGக்காக இறுதி ஊர்வலத்தை நடத்தியதன் மூலம் தங்களுக்கு அந்த விளையாட்டின் மீது இருந்த காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop