தனியார் கல்லூரிக்குச் சென்ற நடிகை சாய் பல்லவியை சூழ்ந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி 2, படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சாய் பல்லவி நடிகையாவதற்கு முன்பே மருத்துவத்துறை மாணவர். கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவம் படித்து முடித்த சாய்பல்லவி இன்னும் பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்யவில்லை. திரைப்படத்துறையை விட படிப்பில் அதிக ஆர்வம்காட்டி வரும் சாய்பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருக்கிறார். முகக்கவசம், துப்பட்டா அணிந்து தேர்வெழுத வந்த சாய் பல்லவியை மற்ற தேர்வர்கள் அடையாளம் கண்டுகொண்டதுடன் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சாய் பல்லவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பலரும் அதை தங்களது சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’, ராணா டக்குபதியுடன் ‘விரத பர்வம்’ உள்ளிட்ட இரண்டு படங்களில் தற்போது நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது தேர்வெழுதியிருப்பதால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து படிப்பில் ஆர்வம்காட்டப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop