Breaking News
Home / செய்திகள் / மோடி இட்லி ; சேலத்தை கலக்கும் பாஜக..

மோடி இட்லி ; சேலத்தை கலக்கும் பாஜக..

சேலத்தில் மோடி இட்லி, 10 ரூபாய்க்கு 4 இட்லி சாம்பாருடன் வழங்கப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டியில் விரைவில் சேலத்து தாமரை நாயகன் மகேஷ் வழங்கும் மோடி இட்லி,  4 இட்லி ரூபாய் 10க்கு சாம்பாருடன் வழங்கப்படும் என்றும், அதி நவீன கருவிகள் மற்றும் சுகாதாரமானது, ஆரோக்கியமானது, சுவையானது, தரமானது எனவும் அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி மாநில துணைத்தலைவர் மகேஷ் பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

சேலம் டவுன்,  சின்ன கடை வீதி, பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை , அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோடி இட்லி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster