படகுகளில் மோதி காயப்படுவதாலும், நெகிழி போன்றவற்றை உண்ணுவதாலும், எண்ணெய் படலத்தில் சிக்குவதாலும் இவை உயிரிழக்கின்றன.
ராமநாதபுரம் அருகே வாலிநோக்கம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகையான புளு வெல் திமிங்கலம். வனத்துறையினர் மீட்டு உடல் கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியானது. உயிர்கோள சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடல் பசு மற்றும் திமிங்கலம் உள்ளிட்ட அரியவகை மீனினங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் இப்பகுதியில் அரியவகை மீனினமான திமிங்கில சுறாக்கள் கரை ஒதுங்கியுள்ளன. அதில் ஒரே ஒரு சுறா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 20 அடி நீளமும் 8 அடி அகலமும், 7 டன் எடையும் உடைய புளுவெல் திமிங்கிலம் வாலிநோக்கம் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. மீனவர்கள் கூறியதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு ராமநாதபுரம் வன உயிரின சரக வனஅலுவலர் சிக்கந்தர் பாட்ஷா மற்றும் வன அலுவலக ஊழியர்கள் சென்று திமிங்கிலத்தை நேரில் பார்த்து ஆய்வை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம் இறந்து ஒரு மாதம் காலம் இருக்கும் என தெரிகிறது. அவை 70 ஆண்டு முதல் 120 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும். தற்போது கரை ஒதுங்கிய சுறாவுக்கு சுமார் 35 முதல் 40 ஆண்டு வயதிருக்கும். சுமார் 8 அடி அகல வாயுடன், 300 பற்களும் உள்ளன. அதன் இரு பக்கவாட்டு துடுப்புகளும் தலா 1 மீட்டர் நீளமுடையவையாக இருந்தன.
மீன் முட்டைகளையும், மிதக்கும் உயிரினங்களையும் விரும்பி உண்ணும். ஆழமான கடலில் வசிக்கும். மனிதர்களை தாக்காது. வனச்சரக சட்டப்படி இந்தவகை மீனை வேட்டையாடுவது குற்றமாகும். படகுகளில் மோதி காயப்படுவதாலும், நெகிழி போன்றவற்றை உண்ணுவதாலும், எண்ணெய் படலத்தில் சிக்குவதாலும் இவை உயிரிழக்கின்றன என்றனர்.
மேலும் திமிங்கலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு பின்னர் மணலில் திமிங்கிலம் உடல் புதைக்கப்பட்டது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop