Breaking News
Home / சினிமா / ஹீரோவாக முகென் ராவ் ; ஹீரோயின் யார் தெரியுமா ?

ஹீரோவாக முகென் ராவ் ; ஹீரோயின் யார் தெரியுமா ?

பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் பெற்று வின்னரானார்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது.
வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகென் ராவ்வுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷ் உடன் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பகல் நிலவு சீரியல் நடிகை ஷிவானி நாராயணனும் முகென் ராவ்வின் படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 3 வெற்றி விழா மேடையில் தர்ஷனுக்கு ஹீரோ வாய்ப்பை வழங்கினார் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து தற்போது முகென் ராவ்வுக்கும் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் திரையில் ஹீரோவாக தோன்றப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster