தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிகில் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
விமர்சக ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக தாறுமாறான வெற்றியை பெற்றது. சமீபகாலமாக விமர்சனங்களை விட வசூலுக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் பிகில் படத்தில் ஃபுட்பால் பிளேயர் ஆக நடித்து இருப்பார். கால்பந்து வீரராக நடித்தபோது தளபதி விஜய்க்கு டூப் போடப்பட்டது என பலரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு பேசிய வாயெல்லாம் அடைத்தனர்.
இந்நிலையில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரே நேரத்தில் நடித்தபோது தளபதி விஜய்க்கு டூப் போட்டவர் யார் என்ற ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது.
ஸ்ரீராம் என்று நடிகர் தான் தளபதி விஜய்க்கு டூப் போட்டுள்ளாராம். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிகில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் நெருங்கிய நிலையில் பிகில் படத்திலிருந்து விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.
Rathiri Rounds Never Stop