Breaking News
Home / செய்திகள் / அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !! -திண்டுக்கல் மாவட்டம் ..

அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் !! -திண்டுக்கல் மாவட்டம் ..

ஊரடங்கு காலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதை கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து தொழிற்சங்கங்களை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதேபோல் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

மேலும் திண்டுக்கல்-திருச்சி புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் மணி, அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுதவிர நத்தம், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster