தனது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ‘பூமி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர் அடுத்தடுத்து மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘ஜன கன மன’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஜெயம் ரவிக்கு செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் பர்த்டே கொண்டாட்டத்துக்கு தயாரானார்கள். இதனிடையே தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது.
ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.
கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்” என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop