Breaking News
Home / சினிமா / பழம்பெரும் இயக்குநர் காலமானார் !!

பழம்பெரும் இயக்குநர் காலமானார் !!

நடிகை சரண்யாவின் தந்தையும், பழம்பெரும் இயக்குநருமான அந்தோணி பாஸ்கர்ராஜ் காலமானார். அவருக்கு வயது 95.

கமல்ஹாசனின் நாயகன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். 2011-ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். இவருக்கும் நடிகர் பொன்வண்ணனுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரண்யாவின் தந்தை அந்தோணி பாஸ்கர்ராஜ் மலையாளத்தில் மனசே நினக்கு மங்களம், கழு மரம், அவகாசம், அவள் ஒரு தேவாலயம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கைநிறைய காசு உள்ளிட்ட படங்களையும் சிங்கள மொழியில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

95 வயதான அந்தோணி பாஸ்கர்ராஜ் வயது முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இயக்குநர் ஏ.பி.ராஜ் 1925-ம் ஆண்டு ஆலப்புழாவில் பாக்யநாதா பிள்ளை, ராஜம்மா தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவர். 1947-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான இவர் 1986-ம் ஆண்டுவரை சினிமாவில் பிஸியாக இருந்தவர். மேலும் இவர் படித்து வளர்ந்தது அனைத்தும் தமிழகத்தில் தான் என்பதும் கூடுதல் தகவல்.

1993-ம் ஆண்டு ஏ.பி.ராஜின் மனைவி சரோஜினி காலமானார். இவர்களுக்கு ஜெய்பால், மனோஜ் என்ற மகன்களும் சரண்யா என்ற மகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster