கத் சென்னையில் மதுக்கடைகள் திறந்த பின் முதன்முறையாக டாஸ்மாக் ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியை தாண்டியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின் 2 மாதங்கள் கழித்து சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டன.
சென்னையில் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு மாநகர காவல் எல்லைக்குள் உள்ள 755 மதுபானக் கடைகளில் 720 கடைகள் திறக்கப்பட்டன.
முதல் நாளான டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்த காணப்பட்ட போதிலும் 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுவிற்பனை 250 கோடியை தாண்டியுள்ளது.
மதுரையில் அதிகபட்சமாக ரூ.52.45 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக திருச்சி ரூ.51.25 கோடியும், சென்னையில் ரூ.50.65 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.
சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில் முறையே ரூ.49.30, ரூ.46.58 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று முழுஊரடங்கு காரணமாக நேற்றே பலர் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி சென்றதால் விற்பனை அதிகரித்துள்ளது.
thanks to : news 18
Rathiri Rounds Never Stop