Breaking News
Home / செய்திகள் / தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்ததாக வழக்குப்பதிவு ;வேலூர் மாவட்டம் ..

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்ததாக வழக்குப்பதிவு ;வேலூர் மாவட்டம் ..

வேலூரில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்ததாக வடமாநில வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர்,
நாடு முழுவதும் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழா நடந்தது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
வேலூர் புதிய பைபாஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் மாடிக்கம்பத்தில் தேசிய கொடி தலைகீழாக பறந்து கொண்டிருந்தது. இதை, அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே போலீசார், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கீழே இறக்கினர்
வேலூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வணிக வளாகத்தில் இயங்கி வரும் ஆண்களுக்கான அழகு நிலையத்தில் (கேர் பிக்சிங் சென்டர்) பணிபுரியும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அசாருதீன் (வயது 25) என்பவர் காலை 7 மணியளவில் கொடியேற்றியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் தலைகீழாக ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை உடனடியாக கீழே இறங்கினர். சுதந்திர தினவிழாவையொட்டி அழகு நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அசாருதீன் தங்கியிருக்கும் இடம் குறித்த விவரங்கள் கிடைக் கவில்லை.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்தாக அசாருதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Thanks to : dinathandhi

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster